ஸ்ரீபெரும்புதூரில் கானா பாடகர்கள் இரட்டை கொலை – பரபரப்பு.. குற்றவாளிகள் யார்?

Double murdered in Sriperumbudur : ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடு புகுந்து இரண்டு இளைஞர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக்கொலை செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Published on: May 17, 2026 at 6:57 pm

ஸ்ரீபெரும்புதூர், மே 17, 2026: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கொல்லப்பட்ட பரத் மற்றும் சீனு ஆகிய இருவரும் கானா பாடல்கள் பாடும் தொழிலில் ஈடுபட்டவர்கள் ஆவார்கள்.

இவர்கள் மே 16ஆம் தேதி மாலை படப்பை அருகே இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நண்பர் மோகன் வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில், மே 17 காலை 11 மணியளவில், ஆறு பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனங்களில் வந்து, வீட்டுக்குள் புகுந்து இருவரையும் சரமாரியாக வெட்டியது.

இதில், இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், மணிமங்கலம் காவல்துறையினர் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.

இந்தச் சம்பவம் நடந்த இடத்தில் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மோகனின் மகன் வீடு திரும்பாததால், போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது; மேலும், சி.சி.டி.வி காட்சிகள், சாட்சிகள் மூலம் குற்றவாளிகளை கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க :சென்னை அம்பத்தூர் மூதாட்டி படுகொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர் வாக்குமூலம்! Australian Girl Killed in Pakistan

பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com