சர்வதேச சுகாதார எமர்ஜென்சி.. அச்சுறுத்தும் எபோலா.. அறிகுறிகள் என்ன?

Ebola Emergency : அரிய வகை எபோலா வைரஸ் பரவும் நிலையில், உலக சுகாதா அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.

Published on: May 17, 2026 at 7:41 pm

நியூயார்க், மே 17, 2026: உலக சுகாதார நிறுவனம், காங்கோ மற்றும் உகாண்டாவில் பரவி வரும் அரிதான ‘புண்டிபுக்யோ’ எபோலா வைரஸ் காரணமாக சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.
இந்த வைரஸ்க்கு இதுவரை 80–88 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும், 300-க்கும் மேற்பட்ட சந்தேகிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு இதனை, “சர்வதேச சுகாதார அவசர நிலை” என அறிவித்துள்ளது. இந்த வைரஸ் ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் அதிகளவில் பரவிவருகிறது.

அதன்படி, புனியா, ரிவாம்புரா, மோங்க்வாலு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும், உகாண்டா நாட்டின் கம்பாலாவில் 2 உறுதி செய்யப்பட்ட நோயாளிகளில் அதில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

வைரஸின் தன்மை

இந்த புண்டிபுக்யோ எபோலா வைரஸ் 2007-இல் முதன்முதலில் கண்டறியப்பட்டது; தற்போது மூன்றாவது முறை பரவுகிறது. இந்த வைரஸ்-க்கு தனிப்பட்ட தடுப்பூசி அல்லது மருந்து இல்லை. காய்ச்சல், உடல் வலி, வாந்தி, இரத்தப்போக்கு இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறி ஆகும். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : காங்கோ நாட்டில் புதிய எபோலா பரவல் உறுதி.. உலக நாடுகள் அதிர்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com