‘குடி’மகன்களுக்கு நற்செய்தி.. டாஸ்மாக்கில் இனி பில்? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Tasmac Bills: டாஸ்மாக்கில் மது விற்பனையை ஒழுங்குப்படுத்த பில் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Published on: August 6, 2026 at 3:56 pm

சென்னை, ஆக.6, 2026: சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் நிறுவனத்திற்கு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையை (MRP) மீறாமல் இருக்க, ஒவ்வொரு விற்பனைக்கும் நுகர்வோருக்கு ரசீது வழங்க வேண்டும் என்றும், அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் உத்தரவிட்டார். வழக்கறிஞர் ஜி. தேவராஜன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றம், மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்களை பராமரிக்கவும், இருப்பு மற்றும் விற்பனைப் பதிவேடு, கடை வாரியான சுருக்க அறிக்கைகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதன் மூலம், கையிருப்பில் உள்ள மதுபான வகைகள், தொடக்க இருப்பு, புதிதாக வந்த பாட்டில்கள், விற்கப்பட்ட பாட்டில்கள் மற்றும் வசூலிக்கப்பட்ட தொகை ஆகிய விவரங்கள் தெளிவாகத் தெரியவரும் என நீதிபதி குறிப்பிட்டார்.

ஆனால், டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்கள் பராமரிக்கப்படுவதில்லை என்றும், நுகர்வோருக்கு ரசீதுகள் வழங்கப்படுவதில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், கொள்முதல் ஆணைகள் மற்றும் மதுபான பாட்டில்கள் விநியோகிக்கப்பட்ட தேதிகள் குறித்த பதிவேடுகளும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

2022-26 காலகட்டத்தில் கூடுதல் விலையாக வசூலிக்கப்பட்ட தொகையை மீட்டெடுத்து அரசுக்குச் செலுத்த வேண்டும் என்றும், ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் FIR பதிவு செய்யவும், பணமோசடி தடுப்புச் சட்டம், 2002-ன் கீழ் நடவடிக்கை எடுக்கவும் மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த உத்தரவு, டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் விற்பனை முறைகளை சீர்படுத்தவும், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க : தி.மு.க பொன்முடிக்கு எதிராக பிடிவாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com