Four-Year Degree Plan: தமிழ்நாட்டில் 4 ஆண்டு பட்டப் படிப்பினை அறிமுகம் செய்ய, தமிழக வெற்றிக் கழக அரசு முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Four-Year Degree Plan: தமிழ்நாட்டில் 4 ஆண்டு பட்டப் படிப்பினை அறிமுகம் செய்ய, தமிழக வெற்றிக் கழக அரசு முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published on: August 6, 2026 at 3:47 pm
சென்னை, ஆக.6, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், உயர்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உயர்கல்வித் துறையின் திட்டங்கள், இலக்குகள் மற்றும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.
முதலமைச்சர் விஜய், உயர்கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துதல், மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல், ஆராய்ச்சியை ஊக்குவித்தல், தரமான உள்கட்டமைப்பை உறுதி செய்தல் போன்ற பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்தார். மேலும், மாணவர் மற்றும் ஆசிரியர் நலன்களை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வெற்றி தமிழகம் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆலோசனையும் நடைபெற்றது. மாநில அரசால் நடத்தப்படும் 20 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் மாற்றங்களை மேற்கொள்ள சட்ட திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், உயர்கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக, உலகளாவிய சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கிய மாநில உயர்கல்விக் கொள்கையில் நான்கு ஆண்டு பட்டப்படிப்பை அறிமுகப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020 கீழ் ஏற்கனவே 4 ஆண்டு பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் அதனை நடைமுறைப்படுத்தும் முன்முயற்சி குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க : மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி.. தமிழக பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com