EU Aqua Export List : மீன் உள்ளிட்ட பொருள்கள் ஏற்றுமதியைத் தொடர்வதற்கான திருத்தப்பட்ட வரைவுப் பட்டியலில், ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவைச் சேர்த்துள்ளது.
EU Aqua Export List : மீன் உள்ளிட்ட பொருள்கள் ஏற்றுமதியைத் தொடர்வதற்கான திருத்தப்பட்ட வரைவுப் பட்டியலில், ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவைச் சேர்த்துள்ளது.

Published on: May 15, 2026 at 2:38 pm
புதுடெல்லி, மே 15, 2026: ஐரோப்பிய ஒன்றியம் (யூரோப்பியன் யூனியன்) சமீபத்தில் வெளியிட்ட திருத்தப்பட்ட வரைவு பட்டியலில் இந்தியா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் கடல் உணவுப் பொருட்கள், குறிப்பாக இறால் போன்ற அக்வா பொருட்கள், 2026 செப்டம்பர் மாதத்திற்குப் பிறகும் ஐரோப்பிய சந்தைக்கு தடையின்றி ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறையில் இந்தியா நீக்கப்பட்டதால், ஏற்றுமதி துறையில் பெரும் அச்சம் நிலவியது.
இதையும் படிங்க : இந்தியாவில் சீனி ஏற்றுமதிக்கு தடை.. என்ன காரணம்?
இந்நிலையில், இந்தியாவின் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஏற்றுமதி ஆய்வுக் குழு ஆகியவை இணைந்து, யூரோப்பியன் யூனியன் விதிமுறைகளுக்கு ஏற்ப கடுமையான கண்காணிப்பு மற்றும் சோதனை முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஆண்டிபயாட்டிக் மருந்துகள் வளர்ச்சி ஊக்கத்திற்கு பயன்படுத்தப்படக்கூடாது என்ற ஐரோப்பிய யூனியன் விதியை இந்தியா பின்பற்றியதால், மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
2025–26 ஆம் ஆண்டில் இந்தியாவின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு 1.59 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில், ஐரோப்பிய யூனியன் சந்தை மூன்றாவது பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அளவு 38% அதிகரித்துள்ளது; மதிப்பில் 41% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இறால் வளர்ப்பாளர்களுக்கு பெரும் நன்மை கிடைக்கிறது.
இதையும் படிங்க : லிட்டருக்கு ₹3 உயர்வு.. பெட்ரோல், டீசல் புதிய விலையை நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com