லிட்டருக்கு ₹3 உயர்வு.. பெட்ரோல், டீசல் புதிய விலையை நோட் பண்ணுங்க!

Petrol Diesel Price Hike : நாடு முழுக்க பெட்ரோல் டீசல் விலை ரூபாய் 3 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Published on: May 15, 2026 at 1:35 pm

சென்னை, மே 15, 2026; அமெரிக்கா- ஈரான் மேற்காசிய போர் காரணமாக, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கச்சா பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

இதனால், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.103.98, டீசல் விலை ரூ.95.50 ஆக உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 வரை விலை உயர்த்தியுள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ.103.98க்கும், டீசல் ரூ.95.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கு பகுதிகளில் நடைபெறும் மோதல் சூழல் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலை உயர்வடைந்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவில் நேரடியாக பெட்ரோல், டீசல் விலைகளில் பிரதிபலித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு, போக்குவரத்து மற்றும் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் சீனி ஏற்றுமதிக்கு தடை.. என்ன காரணம்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com