நீட் வினாத்தாள் கசிவு.. வழக்கை கையில் எடுத்த சி.பி.ஐ.. பரபரப்பு தகவல்கள்!

NEET-UG Leak Case: நீட் இளங்கலை வினாத்தாள் கசிவு வழக்கில் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், தேர்வுக் கட்டணத்தை என்டிஏ திருப்பித் தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: May 13, 2026 at 10:45 am

Updated on: May 13, 2026 at 10:46 am

புதுடெல்லி, மே 13, 2026: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்- இளங்கலை) 2026 கேள்வித்தாள் கசிவு தொடர்பாக மத்திய புலனாய்வு நிறுவனம் (சி.பி.ஐ) வழக்குப் பதிவு செய்துள்ளது. கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை அளித்த எழுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சி.பி.ஐ அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், குற்றச் சதி, மோசடி, நம்பிக்கை மீறல், திருட்டு, சான்றுகள் அழித்தல் மற்றும் 2024 ஆம் ஆண்டின் பொது தேர்வு அநியாய முறைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணைக்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகளின் தன்மை மற்றும் அளவை, அதில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் பங்கு ஆகியவற்றை கண்டறிய விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) இயக்குநர் அபிஷேக் சிங், நீட் (இளங்கலை) தேர்வுக்கான கட்டணம் மாணவர்களுக்கு திருப்பித் தரப்படும் என அறிவித்தார்.

இதையும் படிங்க : ஜூன் 1 நோட்டு புத்தகங்கள் வழங்கல்.. மாணவ செல்வங்களே நோட் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com