இந்த ஆண்டு தங்கம் வாங்காதீர்கள்.. மோடி ஏன் அப்படி சொன்னார்?

Modi’s Cost-Cutting Appeal : இந்த ஆண்டு (2026) தங்கத்தின் நுகர்வை குறைந்துக் கொள்ளுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது ஏன் தெரியுமா?

Published on: May 11, 2026 at 8:23 pm

Updated on: May 11, 2026 at 8:26 pm

புதுடெல்லி, மே 11, 2026: பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்காமல் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதன் முக்கிய காரணம், மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு செலாவணி அழுத்தம் மற்றும் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு ஆகும்.

எண்ணெய் விலை உயர்வு

உலகளவில் கச்சா எண்ணெய் விலை 70 டாலரிலிருந்து 126 டாலர் வரை உயர்ந்துள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில், தனது தேவையின் 85% கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இதற்கிடையில், எண்ணெய் விலை $70 இலிருந்து $126 வரை உயர்ந்ததால், வெளிநாட்டு செலவுகள் அதிகரித்துள்ளன. மேலும், தங்கம் வாங்குவதால் கூடுதல் டாலர் வெளியேற்றம் ஏற்பட்டு, ரூபாய் மதிப்பு குறைகிறது.

மேற்கு ஆசியப் போரின் தாக்கம்

அமெரிக்கா–ஈரான் போர் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை விவகார பாதிப்பு காரணமாக எண்ணெய் விநியோகம் சீர்குலைந்துள்ளது. இதனால் எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைவு ஏற்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவின்படி, இந்தியாவின் வெளிநாட்டு நாணய கையிருப்பு $728 பில்லியனிலிருந்து $690 பில்லியனாக குறைந்துள்ளது.

இதனால் பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் தங்கம் வாங்காமல், வெளிநாட்டு பயணத்தை தவிர்த்து, எரிபொருள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், நாட்டு மக்கள் எரிபொருளை சேமிக்கும் பொருட்டு மின்சார வாகனங்கள், மெட்ரோ ரயில் போன்ற வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்க வாக்காளர் திருத்தம் காரணம்.. மம்தா பானர்ஜி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com