புதுச்சேரி சிறுமி கடத்தல் கொலை.. குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

Puducherry Girl Murder: புதுச்சேரி சிறுமி மரண வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Published on: May 8, 2026 at 2:37 pm

புதுச்சேரி, மே 8, 2026: புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி கருணாஸ்க்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 2024 மார்ச் மாதம் சிறுமி கடத்தப்பட்டு, 2 நாள்களுக்குப் பின் வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், போலீசார் கருணாஸ் மற்றும் விவேகானந்தனை கைது செய்தனர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது விவேகானந்தன் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், கருணாஸ் மீது கடத்தல், அடைத்துவைத்தல், கொலை, தடய மறைத்தல் மற்றும் போக்சோ சட்டம் 6 ஆகிய பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.இந்த நிலையில், இன்று (மே 8, 2026) நீதிபதி சுமதி இறுதி தீர்ப்பாக கருணாஸுக்கு தூக்குத் தண்டனை அறிவித்தார். தீர்ப்புக்குப் பின் குற்றவாளி நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.இதையும் படிங்க :

இதையும் படிங்க: கல்லூரி பேராசிரியர் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க முயற்சி.. பரபரப்பு

பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர் வாக்குமூலம்! Australian Girl Killed in Pakistan

பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com