Mani Shankar Aiyar: காங்கிரஸின் சந்தர்ப்பவாத அரசியல்; இனியார் நம்மை நம்புவார்? என கேள்வியெழுப்பியுள்ளார் காங்கிரஸின் மூத்தத் தலைவர் மணிசங்கர் ஐயர்.
Mani Shankar Aiyar: காங்கிரஸின் சந்தர்ப்பவாத அரசியல்; இனியார் நம்மை நம்புவார்? என கேள்வியெழுப்பியுள்ளார் காங்கிரஸின் மூத்தத் தலைவர் மணிசங்கர் ஐயர்.

Published on: May 8, 2026 at 2:30 pm
சென்னை, மே8, 2026: காங்கிரஸின் சமீபத்திய கூட்டணி நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவர் மணிசங்கர் ஐயர் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “மாநில அளவில் மக்களின் தீர்ப்பு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக அமைந்துள்ளது; இது உண்மையை. அதேநேரம், விஜய் முற்றிலும் மதச்சார்பற்றவர் என்பதும் என்பதும் திராவிட சிந்தாந்தம் கொண்டவர் என்பதும் உண்மைதான்.
எனினும், நீண்டகால நம்பகமான கூட்டணிக் கட்சியை காங்கிரஸ் இப்படி திடீரென்று கைவிடுவது மலிவான சந்தர்ப்பவாத அரசியலாக மக்கள் மத்தியில் தோன்றும். இனி நம்மை யார் நம்புவார்கள்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் வெற்றி
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி காங்கிரஸின் சொந்த பலத்தால் அல்ல, திமுக கூட்டணி ஆதரவால் சாத்தியமானது என வலியுறுத்தப்படுகிறது. மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணி 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 5 இடங்களை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விஜய்க்கு ஆதரவு உண்டா? இல்லையா? நாளை காலை சொல்ரேன்.. திருமாவளவன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com