விஜய்க்கு ஆதரவு உண்டா? இல்லையா? நாளை காலை சொல்ரேன்.. திருமாவளவன்!

Thol Thirumavalavan: விஜய்க்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக மாலை ஆய்வு நடத்திவிட்டு, நாளை காலை சொல்கிறோம் என்கிறார் தொல். திருமாவளவன்.

Published on: May 8, 2026 at 2:07 pm

சென்னை, மே 8, 2026: விசிக பொதுச்செயலாளர் திருமாவளவன், “பொதுச்செயலாளர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்: தவெக ஆதரவு குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இன்று மாலை காணொலி மீட்டிங் ஆலோசனை நடைபெறவுள்ளது; நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துகளை கேட்டு, நாளை காலை பத்திரிகையாளர்களிடம் அறிவிக்கிறேன்” என்றார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனித்து 108 இடங்களை வென்றாலும், ஆட்சி அமைக்க முடியாமல் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடி வருகிறார். தற்போது காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது; கம்யூனிஸ்ட் மற்றும் விசிக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், திருமாவளவன், “இத்தனை காலம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பயணித்தோம். ஸ்டாலினை சந்தித்தோம். தவெக ஆட்சியமைக்க இடையூறாக இருக்கமாட்டோம் என அவர் உறுதியளித்தார். மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : தவெக ஆதரவு.. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை அறிவிப்பு?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com