பீகார் சீதலாதேவி கோவிலில் கூட்ட நெரிசல்.. 8 பேர் மரணம்!

Stampede at Bihar Temple: பீகாரின் நாலந்தாவில் உள்ள சீதலா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், பலர் காயமுற்றனர்.

Published on: March 31, 2026 at 2:29 pm

பாட்னா, மார்ச் 31, 2026: பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டம், மக்ரா கிராமத்தில் உள்ள சீதலா மாதா மந்திரில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் கோவிலில் பெரும் கூட்டம் திரண்டபோது நடந்தது. இது குறித்து பாதுகாப்பில் உள்ள அதிகாரிகள் கூறுகையில், சைத்ர மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். கூட்டத்தின் திடீர் அசைவால் ஏற்பட்ட நெரிசலே உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் காரணமாகியதாக கூறப்படுகிறது.

நன்றி: (ஏ.என்.ஐ)

இந்த நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக கிராம மக்கள் உதவியுடன் கோவிலுக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் தொடங்கினர். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில், கோவில் வளாகத்தைச் சுற்றி பெரும் கூட்டம் திரண்டிருந்தது; அதிகாரிகள் நிலைமையை கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 20க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பெட்ரோல் பம்ப்-களில் மண்ணெண்ணெய் விநியோகம்.. 60 தினங்களுக்கு அவசர சப்ளை.. மத்திய அரசு

மேற்காசிய பதற்றம்.. 24 மணி நேர கண்காணிப்பு.. இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை.. பிரதமர் நரேந்திர மோடி!
Narendra Modi

மேற்காசிய பதற்றம்.. 24 மணி நேர கண்காணிப்பு.. இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை.. பிரதமர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com