பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் புகைமூட்டம் எதிரொலியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் புகைமூட்டம் எதிரொலியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: November 16, 2024 at 7:15 pm
Pakistan | பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக காற்று தரக்குறியீடு இதுவரை இல்லாத வகையில் சாதனை பதிவாக, 1,600 ஆக உயர்ந்து உள்ளது.
இதன் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில், புகைமூட்டம் மற்றும் குறைவான தூரமே பார்க்கக்கூடிய சூழல் போன்றவற்றால், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24-ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களும் ஆன்லைன் கல்வி முறையையே தொடருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நிலைமை மிக மோசமடைந்த நிலையில், லாகூர் மற்றும் முல்தான் நகரங்களில் வாரத்திற்கு 3 நாட்கள் வரை ஊரடங்கை பஞ்சாப் அரசு நேற்று அமல்படுத்தியது. இன்றும் நாளையும் இந்த முழு ஊரடங்கு தொடரும் என அறவிக்கப்பட்டுள்ளது. வருகிற திங்கட்கிழமை முதல் 3 நாட்களுக்கு நிலைமை கண்காணிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க டிராக்டர் திருடச் சென்ற இடத்தில் குண்டு அடி வாங்கிய திருடன்; பஞ்சாபில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com