Israel: காசா, லெபனான், சிரியாவில் காலவரையின்றி துருப்புக்கள் இருக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
Israel: காசா, லெபனான், சிரியாவில் காலவரையின்றி துருப்புக்கள் இருக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
Published on: April 16, 2025 at 8:51 pm
Updated on: April 16, 2025 at 9:16 pm
ஜெருசலேம், ஏப்.16 2025: இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் புதன்கிழமை (ஏப்ரல் 16, 2025) காசா பகுதி, லெபனான் மற்றும் சிரியாவில் இருந்து பாதுகாப்பு படையினர் அகற்றப்படமாட்டார்கள் என்றார். இது குறித்து பேசிய அவர், “ காசா பகுதி, லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள பாதுகாப்பு மண்டலங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் துருப்புக்கள் காலவரையின்றி இருக்கும்” என்றார்.
இது போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை தொடர்பாக ஹமாஸுடனான பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலாக்கும் என்று சர்வதேச சமூகத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் மேலும் 22 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் ஒன்று பச்சிளம் குழந்தை எனக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் சிறுமியின் தாயும் காயம் அடைந்தார் எனக் கூறப்படுகிறது. இஸ்ரேலிய படைகள் கடந்த மாதம் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு, பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸை அழுத்தம் கொடுத்தன.
இதற்கிடையில், கடந்த ஆண்டு ஹெஸ்பொல்லா போராளிக் குழுவுடனான போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து லெபனானின் சில பகுதிகளிலிருந்து இஸ்ரேல் பின்வாங்க மறுத்துவிட்டது. இந்த நிலையில், இஸ்ரேல் காசாவில் இருந்து முழுமையாக வெளியேறி, நீடித்த போர் நிறுத்தம் ஏற்படாமல், மீதமுள்ள டஜன் கணக்கான பணயக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று ஹமாஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரண்ட்.. அடுத்து என்ன?பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com