NEET PG 2025: நீட் முதுகலை (NEET PG) 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்ப செயல்முறை வியாழக்கிழமை (ஏப்.17 2025) தொடங்குகிறது.
NEET PG 2025: நீட் முதுகலை (NEET PG) 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்ப செயல்முறை வியாழக்கிழமை (ஏப்.17 2025) தொடங்குகிறது.
Published on: April 16, 2025 at 9:09 pm
Updated on: April 16, 2025 at 10:58 pm
புதுடெல்லி, ஏப்.16 2025: தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) நீட் முதுகலை (NEET PG) 2025க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை natboard.edu.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெனியான அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, விண்ணப்ப செயல்முறை நாளை (வியாழக்கிழமை) ஏப்ரல் 17 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மே 7 ஆம் தேதி இரவு 11:55 மணி வரை ஆகும். மேலும் அந்த அறிவிப்பில், “தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) நீட் முதுகலை (NEET-PG) 2025 தேர்வை ஜூன் 15, 2025 அன்று கணினி அடிப்படையிலான தளத்தில் இரண்டு ஷிப்டுகளில் நடத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் முதுகலை 2025க்கு எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்ப கட்டணம்
பொது, ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவு வேட்பாளர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.3500 ஆகும். தொடர்ந்து, பட்டியல் (எஸ்சி), பழங்குடி (எஸ்டி) மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : பி.எம். இன்டன்ஷிப் ஸ்கீம் 2025: 10, 12ஆம் வகுப்பு பாஸ் மாணவர்கள் நோட் பண்ணுங்க..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com