Food: உடலை குளிர்ச்சியூட்டும் வெந்தய குழம்பு இந்த சம்மருக்கு இப்படி செஞ்சி சாப்பிடுங்க.
Food: உடலை குளிர்ச்சியூட்டும் வெந்தய குழம்பு இந்த சம்மருக்கு இப்படி செஞ்சி சாப்பிடுங்க.
Published on: April 16, 2025 at 8:10 pm
காரசாரமாக வெந்தய குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் -4 ஸ்பூன்
கடுகு -¼ டீஸ்பூன்
வெந்தயம்-¼ டீஸ்பூன்
உளுந்து -½ ஸ்பூன்
சின்ன வெங்காயம் -15
பூண்டு -12 பல்லு
தக்காளி -2
கறிவேப்பிலை -3 கொத்து
மஞ்சள் தூள் -¼
குழம்பு மிளகாய்த்தூள் -1 டேபிள் ஸ்பூன்
புளி கரைசல் – சிறிய எலுமிச்சை அளவு
சர்க்கரை -1 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – ¼ கப்
அரைக்க வேண்டியவை
அரிசி -1 ஸ்கூல்
மிளகு -1 ஸ்பூன்
வெந்தயம்-1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் அரிசி, மிளகு மற்றும் வெந்தயம் சேர்த்து அடுப்பு தீயை லோ பிளேமில் வைத்து வறுக்க வேண்டும். இதிலிருந்து மணம் வந்த பின்னர் இதனுடன் சீரகம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். இவை ஆரிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் போன்று அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து கடுகு பொறிந்ததும் வெந்தயம் மற்றும் உளுந்து சேர்த்து வறுக்கவும். பின்னர் இதனுடன் தோல் நீக்கி சுத்தம் செய்த சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும். இவை பொன்னிறமாக மாறிய பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் மூன்று கொத்து கருவேப்பிலை சேர்க்கவும்.
இதையும் படிங்க : காரசாரமான சுவையில் கடாய் சிக்கன் ; இப்டி டிரை பண்ணி பாருங்க ; சுவை அள்ளும்!
தக்காளி வெந்து மசிந்து வந்ததும் இதனுடன் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் ஏற்கனவே அரைத்து வைத்த பொடியிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனுடன் ஒரு எலுமிச்சை அளவு புளியை கரைத்து சேர்த்துக் கொள்ளவும். குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். குழம்பு நன்கு கொதித்து கெட்டி பதம் வரும் பொழுது சிறிது வெள்ளம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் அடுப்பு தீயை மீடியம் பிளேமில் வைத்து கொதிக்க விடவும். குழம்பு வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறுதியாக சிறிது தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது சுவையான வெந்தய குழம்பு தயார். இது சாதம். இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.. உருளைக் கிழங்கு வறுவல்.. இப்படி பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com