Food: தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசத்துடன் சேர்த்து உண்ணக்கூடிய சுவையான உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செஞ்சு அசத்துங்க.
Food: தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசத்துடன் சேர்த்து உண்ணக்கூடிய சுவையான உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செஞ்சு அசத்துங்க.
Published on: April 7, 2025 at 11:51 am
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
உருளைக்கிழங்கு -¼ கிலோ
எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு -1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு -1 டீஸ்பூன்
சீரகம்-½ டீஸ்பூன்
கடுகு-½ டீஸ்பூன்
வத்தல் -3
கருவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் -½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் -½ டீஸ்பூன்
உப்பு -½ டீஸ்பூன்
தண்ணீர் -3 டீஸ்பூன்
மசாலா தயாரிக்க
தனியா -2 டேபிள் ஸ்பூன்
சீரகம்-1 டேபிள் ஸ்பூன்
பூண்டு -6 பல்லு
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
உப்பு -1 டீஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
செய்முறை
உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். உருளைக்கிழங்கை தண்ணீரில் சேர்ப்பதால் நிறம் மாறாமல் இருக்கும். உருளைக்கிழங்கு வறுவலுக்கு மசாலா தயாரிக்க ஒரு மிக்ஸி ஜாரில் தனியா, சீரகம், பூண்டு, மிளகாய் தூள், உப்பு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: மன மணக்கும் மட்டன் சுக்கா; வீட்டிலேயே சிம்பிளா செய்யலாம்: எப்படி தெரியுமா?
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் அதனுடன் உளுந்தம் பருப்பு, சீரகம், கடலை பருப்பு, வத்தல், பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இவை நிறம் மாறியதும் இதனுடன் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும். பின்னர் இதனுடன் அரை டீஸ்பூன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் இதனுடன் ஏற்கனவே தயார் செய்து வைத்த மசாலாவை சேர்த்து கலந்து விடவும். உருளைக்கிழங்கு வெந்து வருவதற்காக சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். பின்னர் கடாயை மூடி அடுப்பு தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து வேகவிடவும். அடி பிடிக்காமல் இருக்க இடையிடையே கிளறி விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் பாத்திரத்தை இறக்கவும். இப்போது சுவையான குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய உருளைக்கிழங்கு வருவல் தயார். இதை தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : காரசாரமான சுவையில் கடாய் சிக்கன் ; இப்டி டிரை பண்ணி பாருங்க ; சுவை அள்ளும்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com