DK Shivakumar: கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவக்குமார் தொடர்ந்து நீடிப்பார் என்று காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.
DK Shivakumar: கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவக்குமார் தொடர்ந்து நீடிப்பார் என்று காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.
Published on: April 7, 2025 at 12:46 pm
பெங்களூரு, ஏப்ரல் 7 2025:கர்நாடகத்தில் முதலமைச்சராக சித்தராமையா உள்ளார் துணை முதலமைச்சர் ஆக டி கே சிவகுமார் பணியாற்றி வருகிறார். இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளநிலையில், டி. கே. சிவகுமார் காங்கிரஸ் மாநில தலைவராகவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் மாநில தலைவர் பதவியில் இருந்து டி. கே. சிவகுமாரை விடுவிக்க வேண்டும் என அக்கட்சி அமைச்சர்கள் சதீஸ் ஜார்கிகோளி, கே.என்.ராஜண்ணா உள்ளிட்டோர் கட்சி மேலிடத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் வருகிற டிசம்பர் மாதம் வரை கட்சி மாநில தலைவராக டி. கே. சிவக்குமார் தொடர்ந்து நீடிப்பார் என கட்சியின் தலைமை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் முதலமைச்சர் பதவி சித்தராமையா மற்றும் சிவகுமார் ஆகியோருக்கு ஆளுக்கு 2 1/2 ஆண்டுகள் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி சித்தையாய ராமையாவின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளதாகவும், ஆட்சி தலைமையில் மாற்றம் நிகழும் என்பது குறித்தும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் சித்தராமையா ஆதரவாளர்கள் அவரே தொடர்ந்து அமைச்சராக நீட்டிப்பார் என்றும் டி. கே. சிவகுமார் ஆதரவாளர்கள் முதலமைச்சர் பதவியில் டி. கே. சிவக்குமார் அமருவார் என்றும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவியேற்பு.. வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com