இந்தியாவின் இறையாண்மையை யாரும் அசைக்க முடியாது.. ரஷ்ய அதிபர் புதின்

Vladimir Putin: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் எந்த நாடும் தடைகள் அல்லது அழுத்தங்களை ஏற்படுத்த முயன்றாலும், அது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவிடம் பலிக்காது என்று தெரிவித்துள்ளார்.

Published on: June 7, 2026 at 9:01 pm

செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ஜுன் 7 2026: சென்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா எப்போதும் இறையாண்மை கொண்ட நாடாக செயல்படுகிறது எனக் கூறினார்.

இந்தியாவின் இறையாண்மையை தண்டனைகள் மூலம் பாதிக்க முயற்சித்தால் அது “பூமராங்” போல உடனடியாகத் திரும்பும் என தெரிவித்துள்ளார். மேலும், மோடியுடன் நீண்டகாலமாக நெருக்கமான உறவு வைத்திருப்பதாக கூறிய புதின், ஒருகாலத்தில் அமெரிக்கா மோடிக்கு நுழைவு தடை விதித்திருந்ததை நினைவுகூர்ந்தார்.

பின்னர் மோடி பிரதமரான பிறகு அந்த தடைகள் நீக்கப்பட்டதோடு, இந்தியா – அமெரிக்கா உறவுகளும் வலுவடைந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்தியா தனது தேசிய நலன்களை முன்னிலைப்படுத்தி, தன்னிச்சையாக முடிவெடுக்கும் நாடு.

இந்தியா ரஷ்யாவின் Su-57 போர் விமானம் அல்லது S-500 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வாங்கினாலும், அது இந்தியாவின் சுயாதீன முடிவாகும் என புதின் தெரிவித்தார். “எந்த நாடும் எங்களுக்கு உத்தரவிட முடியாது. இந்தியா போன்ற கூட்டாளிகளுடன் எப்போதும் நம்பிக்கையுடன் செயல்படுகிறோம்,” என அவர் கூறினார். பிரமோஸ் ஏவுகணை வடிவமைப்பில் இரு நாடுகளின் நிபுணர்கள் இணைந்து பணியாற்றுவதையும் குறிப்பிட்டார்.

இந்தியாவுடன் இணைந்து உருவாக்க முன்மொழியப்பட்ட Su-57 திட்டம் நடைமுறைக்கு வராததால் ரஷ்யா தனியாக அந்த விமானத்தை உருவாக்கியதாகவும், தற்போது இந்தியாவுக்கு அதை விற்பனை செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக இந்தியாவின் முக்கிய ஆயுத வழங்குநராக இருந்த ரஷ்யா, உக்ரைன் போரால் விநியோகத்தில் சிக்கல்கள் சந்தித்துள்ளது. இதனால் இந்தியா தனது AMCA (Advanced Multirole Combat Aircraft) திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

ஐந்தாம் தலைமுறைப் போர் விமானத்திற்கான பல ஆண்டுகாலத் தேடலுக்குப் பிறகு, இந்தியா தனது லட்சியமிக்க மேம்பட்ட பல்திறன் போர் விமானத் (AMCA) திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு விண்வெளித் திட்டமாகக் கருதப்படுகிறது.

2035க்கு முன் AMCA விமானம் இந்திய வான்படையில் சேர வாய்ப்பில்லை என்பதால், தொழில்நுட்ப விவரக்குறிப்புகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில், குறைந்தபட்சம் இரண்டு படைப்பிரிவுகளுக்கு (சுமார் 36) Su-57 விமானங்களைக் கொள்முதல் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இதையும் படிங்க அனைவரும் ட்ரம்பை விரும்புகிறார்கள்.. தனக்கு தானே வீடியோ!

பின்வாங்கும் அமெரிக்க படைகள்? உண்மைக்கு புறம்பான தகவல்.. ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!
US Denies Hormuz Report

பின்வாங்கும் அமெரிக்க படைகள்? உண்மைக்கு புறம்பான தகவல்.. ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com