வடக்கு மாசிடோனியாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!

Murmu North Macedonia Visit : இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அதிகாரப்பூர்வ அரசு பயணமாக வடக்கு மாசிடோனியா தலைநகர் ஸ்கோப்ஜே சென்றடைந்தார்.

Published on: July 21, 2026 at 12:26 pm

Updated on: July 21, 2026 at 3:57 pm

ஸ்கோப்ஜே (வடக்கு மாசிடோனியா), ஜூலை 21, 2026: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடுகளான மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று மால்டோவா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் மயா சந்து, துணை பிரதமர் மைஹை பாப்சொய் உள்பட பலரை ஜனாதிபதி முர்மு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இன்று அரசு பயணத்தின் ஒரு பகுதியாக வடக்கு மாசிடோனியா தலைநகர் ஸ்கோப்ஜே சென்றடைந்தார். அங்கு அவருக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்தப் பயணத்தின் போது, வடக்கு மாசிடோனியாவின் உயர்மட்ட தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் மக்கள்-மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

மேலும், இந்திய வம்சாவளியினரையும் தொழில்துறை பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வடக்கு மாசிடோனியா இடையேயான நட்புறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

குடியரசுத் தலைவரின் இந்த அரசு பயணம், இந்தியாவின் ஐரோப்பிய நாடுகளுடனான உறவை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து இந்தப் பயணத்தின்போது முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : மேற்காசிய மோதல் இடையூறு.. இந்தியா 7.7 சதவீத வளர்ச்சி.. பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி போராட்டத்தில் காயம்.. ஜெ.பி நட்டா, ராகுல் காந்தி சந்திப்பு.. சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்?
CJP Protest

டெல்லி போராட்டத்தில் காயம்.. ஜெ.பி நட்டா, ராகுல் காந்தி சந்திப்பு.. சோனம் வாங்சுக்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com