தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்: அபிஜீத் திப்கே

Cockroach Janata Party : மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை தலைமை போராட்டம் ஓயாது என CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.

Published on: June 7, 2026 at 8:44 pm

Updated on: June 7, 2026 at 8:45 pm

புதுடெல்லி, ஜுன் 7 2026: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.

தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 7,000 பேர் கலந்து கொண்டதாகவும், அது வெற்றிகரமாக நடந்ததாகவும் அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் திப்கே, சுமார் 6,000 முதல் 7,000 பேர் வரை இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்தார். NEET, CBSE, CUET மற்றும் SSC உள்ளிட்ட தேர்வுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

கடந்த மே மாதத்தில் சமூக ஊடக இயக்கமாகத் தொடங்கப்பட்ட CJP, இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கான பின்தொடர்பவர்களை பெற்றுள்ளது. இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள இந்த அமைப்பு, தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்சோனம் வாங்சுக், திபங்கர் பட்டாச்சார்யா, அன்னி ராஜா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதற்கிடையில், அபிஜீத் திப்கேவின் இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க இந்த ஆட்டத்தில் நான் இல்லை.. மம்தா பானர்ஜிக்கு கங்குலி பதில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com