ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரண்ட்.. அடுத்து என்ன?பரபரப்பு தகவல்கள்!

Arrest warrants against Sheikh Hasina: நில மோசடி வழக்குகளில் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் புதிய கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ளது.

Published on: April 14, 2025 at 6:01 pm

Updated on: April 14, 2025 at 7:33 pm

டாக்டா, ஏப்.14 2025: வங்கதேச முன்னாள் பிரதமர் ஹேச் ஹசீனா, அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்தியதாக வங்கதேச நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13 2025) அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

டாக்கா பெருநகர மூத்த சிறப்பு நீதிபதி ஜாகிர் ஹொசைன், ஊழல் தடுப்பு ஆணையம் (ஏசிசி) தாக்கல் செய்த மூன்று தனித்தனி குற்றப்பத்திரிகைகளை மதிப்பாய்வு செய்த பிறகு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து வழக்குரைஞர் அமினுல் இஸ்லாம், “கைது உத்தரவுகளை நிறைவேற்றுவது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க ஏப்ரல் 27 ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது” என்றார்.

பெங்காலி நாளிதழான புரோதோம் அலோவின் கூற்றுப்படி, ஹசீனாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிலங்களைப் பெறுவதில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குற்றப்பத்திரிகையில் துலிப் சித்திக் மற்றும் ரெஹானாவின் மகன் ரத்வான் முஜிப் சித்திக் உட்பட மொத்தம் 53 நபர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தற்போது 77 வயதான ஹசீனாவின் 16 ஆண்டுகால ஆட்சி 2024ஆம் ஆண்டு மாணவர் போராட்டம்- வன்முறை காரணமாக முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வக்ஃப் மசோதாவை நிறைவேற்ற மாட்டோம்: மம்தா பானர்ஜி உறுதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com