Waqf Act: வக்ஃப் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “வக்ஃப் திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல்” எனத் தெரிவித்துள்ளார்.
Waqf Act: வக்ஃப் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “வக்ஃப் திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல்” எனத் தெரிவித்துள்ளார்.
Published on: April 14, 2025 at 5:49 pm
புதுடெல்லி, ஏப்.14 2025: வக்ஃப் மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் இம்ரான் மசூத், வக்ஃப் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஷாரிக் அகமது தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வக்ஃப் சட்டத்தில் திருத்தம் இந்திய அரசியலமைப்பு வாக்குறுதியின் மையத்தைத் தாக்குகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், வக்ஃப் சட்டம், “வக்ஃப் மற்றும் கட்டிடக்கலையை அகற்றுவதற்கான ஒரு வடிவம்” என்றும், அது “நிர்வாக ஆணையின் மூலம் வக்ஃப்பின் சட்டப்பூர்வ தன்மையை அரிக்க முயல்கிறது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, “இது சுதந்திரத்தை ஆட்சியரின் விருப்புரிமையாலும், பாதுகாப்பை முன்கூட்டிய உரிமையாலும் மாற்றுகிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் பிரிவுகள் 14, 21, 25 மற்றும் 26 இன் கீழ் உள்ள அடிப்படை உத்தரவாதங்கள் சீர்குலைக்கப்படுகின்றன. மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டை திணிப்பதன் மூலம் கூட்டாட்சி திட்டத்தை மீறுகிறது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏப்ரல் 16 ஆம் தேதி விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : National Herald case: ராகுல், சோனியா தொடர்புடைய சொத்துக்கள் பறிமுதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com