Waqf Amendment Act: ‘வக்ஃப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்’ என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு பாரதிய ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Waqf Amendment Act: ‘வக்ஃப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்’ என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு பாரதிய ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Published on: April 12, 2025 at 9:07 pm
கொல்கத்தா, ஏப்.12 2025: மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் சட்டத்திற்கு எதிராக சனிக்கிழமை (ஏப்.12 2025) போராட்டங்கள் நடந்தன. இந்தப் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், பலர் காயமுற்றுள்ளனர் இந்த நிலையில், மாநிலத்தில் இந்து வெறுப்பு போராட்டங்களை மம்தா பானர்ஜி தூண்டி விடுகிறார் என இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களில் தந்தை-மகன் என்ற இருவர், சம்சர்கஞ்சில் உள்ள ஜாஃப்ராபாத்தில் உள்ள அவர்களது வீட்டில் கொல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருவரின் உடல்களிலும் பல கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக ஒரு ஐபிஎஸ் அதிகாரி பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், ”இது இரக்கமற்ற தாக்குதலைக் குறிக்கிறது. குற்றவாளிகள் எங்கள் வீட்டைக் கொள்ளையடித்து, இருவரையும் கத்தியால் குத்திவிட்டு வெளியேறினார்கள்” அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மம்தா பானர்ஜி உறுதி
இதற்கிடையில், இதற்கிடையில், வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தனது அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அதில், ””நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம் . இந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இது எங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்படாது” எனத் தெரிவித்துள்ளார்.
সবার কাছে আবেদন
— Mamata Banerjee (@MamataOfficial) April 12, 2025
সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।
মনে রাখবেন, যে…
தொடர்ந்து, “அனைத்து மதத்தினரும் தயவுசெய்து அமைதியாக இருங்கள். மதத்தின் பெயரால் மதச்சார்பற்ற நடத்தையில் ஈடுபடாதீர்கள். ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது; அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டிவிடாதீர்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பயங்கரவாதி தஹாவ்வூர் ராணா இந்தியா வருகை; என்.ஐ.ஏ கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com