UPI services disrupted: நாடு முழுவதும் இன்று யு.பி.ஐ பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டனர்.
UPI services disrupted: நாடு முழுவதும் இன்று யு.பி.ஐ பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டனர்.
Published on: April 12, 2025 at 8:38 pm
புதுடெல்லி, ஏப்.12 2025: யு.பி.ஐ (UPI) சேவைகள் இன்று (ஏப்.12 2025) இந்தியா முழுவதும் பெரும் இடையூறுகளை சந்தித்தன. இது ஒரு மாதத்தில் மூன்றாவது பெரிய செயலிழப்பைக் குறிக்கிறது. இதனால், பேடிஎம் (Paytm), கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) போன்ற டிஜிட்டல் கட்டண தளங்களில் பயனர்கள் பரவலான சிக்கல்களை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில், கண்காணிப்பு தளமான டவுண்டிடெக்டர் (DownDetector) பிற்பகல் வரை 2,100 க்கும் மேற்பட்ட புகார்களைப் பதிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. இதில், சுமார் 80% பயனர்கள் தோல்வியுற்ற பரிவர்த்தனைகள் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். மேலும், தோல்வியுற்ற கட்டண அறிவிப்பு பிழைகளின் ஸ்கிரீன்ஷாட்களால் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன.
இதற்கிடையில், யு.பி.ஐ சேவைகளை நிர்வகிக்கும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “என்.பி.சி.ஐ தற்போது இணைய தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது.
இதன் விளைவாக சில யு.பி.ஐ பரிவர்த்தனைகள் சரிந்துள்ளன.
NPCI is currently facing intermittent technical issues, leading to partial UPI transaction declines. We are working to resolve the issue, and will keep you updated.
— NPCI (@NPCI_NPCI) April 12, 2025
We regret the inconvenience caused.
இந்தச் சிக்கலை தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். சிரமத்திற்கு வருந்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க : ஹோம் லோன் வட்டியை குறைப்பது எப்படி? இந்த 4 வழிகளை ஃபாலோ பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com