Tahawwur Rana: பயங்கரவாதி தஹாவ்வூர் ராணா இந்தியா கொண்டுவரப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
Tahawwur Rana: பயங்கரவாதி தஹாவ்வூர் ராணா இந்தியா கொண்டுவரப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
Published on: April 10, 2025 at 11:55 pm
புதுடெல்லி, ஏப்.10 2025: நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு முகமை போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் ராணாவின் பங்கு குறித்து விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையானது, டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ தலைமையகத்தில் நடந்துவருகிறது.
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, இன்று (ஏப்.10 2025) மாலை 6.30 மணியளவில் அமெரிக்காவிலிருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி வந்தடைந்தார்.
166 பேர் கொல்லப்பட்ட 26/11 தாக்குதல்களுக்கு நீதி தேடுவதில் அவர் நாடு கடத்தப்பட்டது இந்தியாவுக்குக் கிடைத்த ராஜ தந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, டெல்லி பாலம் தொழில்நுட்ப விமான நிலையத்திற்கு அவர் வந்தவுடன் அவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கனடாவில் இந்தியர் குத்திக் கொலை.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com