Food: சப்பாத்தி மற்றும் பரோட்டாவுக்கு சூப்பர் காம்பினேஷன் சுவையான காலிஃப்ளவர் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.
Food: சப்பாத்தி மற்றும் பரோட்டாவுக்கு சூப்பர் காம்பினேஷன் சுவையான காலிஃப்ளவர் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.
Published on: April 10, 2025 at 4:53 pm
சுவையான காலிஃப்ளவர் கிரேவி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
காலிஃப்ளவர் -1
எண்ணெய் -3 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
மிளகாய் -1
குழம்பு மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -½ டீஸ்பூன்
கரம் மசாலா -½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பச்சை பட்டாணி -1 கப்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
கஸ்தூரி மேத்தி – சிறிதளவு
அரைக்க வேண்டியவை
எண்ணெய் -2 டீஸ்பூன்
சீரகம் -½ டீஸ்பூன்
சோம்பு -½ டீஸ்பூன்
பட்டை -2
கிராம்பு-3
ஏலக்காய் -2
பூண்டை -6 பல்லு
இஞ்சி -1 துண்டு
பெரிய வெங்காயம் -2
புதினா – சிறிதளவு
தக்காளி -1
முந்திரி பருப்பு -7
செய்முறை
முதலில் காலிஃப்ளவரை நன்கு கழுவி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்த நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் காலிஃபிளவரை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூண்டு, இஞ்சி, நறுக்கிய பெரிய வெங்காயம், சிறிதளவு புதினா, தக்காளி, முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.
இவை நன்கு வெந்து மசிந்த பின்னர் சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின்னர் இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த விழுதினை சேர்த்து கலந்து விடவும்.
இதையும் படிங்க : சுவை நாவிலேயே நிற்கும் ; எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ; இப்படி செஞ்சு அசத்துங்க!
பின்னர் இதனுடன் குழம்பு மிளகாய்த்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். மசாலாவின் பச்சை வாடை நீங்கிய பின்னர் இதனுடன் காலிபிளவர் சேர்த்து கலந்து விடவும். இதனுடன் கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனுடன் ஊற வைத்து வேக வைத்த பட்டாணி சேர்த்து அடுப்பு தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்.
இடையிடையே மூடியை திறந்து கிளறி விடவும். இந்த காலிஃப்ளவர் கிரேவியை பட்டாணி சேர்க்காமலும் செய்யலாம். பத்து நிமிடத்திற்கு பின்னர் கிரேவியில் எண்ணெய் பிரிந்து காலிஃப்ளவர் வெந்து தயாராகி இருக்கும். இறுதியாக சிறிது கொத்தமல்லி தலைகள் மற்றும் கஸ்தூரி மேத்தி தூவி இறக்கவும். இப்போது சுவையான காலிஃப்ளவர் கிரேவி தயார். இதை சாதம், பரோட்டா மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க :வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டிலேயே சாக்கோபார் ஐஸ்கிரீம்.. ஈஸியா இப்படி பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com