Food: குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்கோபார் ஐஸ்கிரீம் வீட்டிலேயே எளிமையான முறையில் இப்படி செய்து பாருங்க.
Food: குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்கோபார் ஐஸ்கிரீம் வீட்டிலேயே எளிமையான முறையில் இப்படி செய்து பாருங்க.
Published on: April 2, 2025 at 2:34 pm
கோடை காலத்தில் அனைவரும் விரும்பும் சாக்கோபார் ஐஸ்கிரீம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் -1½ லிட்டர்
பால் பவுடர் -3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை -3 டேபிள் ஸ்பூன்
கான்பிளவர் மாவு -1½ டீஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்
மில்க் சாக்லேட் – 1 கப்
டார்க் சாக்லேட் -1 கப்
பாய்லிங் சீட்
ஐஸ் குச்சி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்க்காத கெட்டியான பால் சேர்த்துக் கொள்ளவும். பால் சூடானதும் பால் பவுடர் சேர்த்து கலந்து விடவும். பால் பவுடர் சேர்த்து கலந்து விடும்பொழுது பால் கெட்டியாக மாறும். பின்னர் இதனுடன் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். ஒரு கப்பில் ஒன்றரை டீஸ்பூன் கான்பிளவர் மாவு சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் அல்லது ¼ கப் பால் சேர்த்து கரைத்து அந்த கலவையை கொதித்துக் கொண்டிருக்கும் பாலுடன் சேர்த்து கலந்துவிட வேண்டும்.
கான்பிளவர் மாவு சேர்த்த உடன் பால் நன்கு கட்டிப் பதம் வரும். பாலில் கட்டி விழாமல் இருக்க கையெடுக்காமல் கலந்து விடவும். அடுப்பு தீயை ஹை ஃப்ளேமில் வைத்து பாலை நன்கு கொதிக்க விட்டு இரண்டு நிமிடம் கலந்து விட வேண்டும். பால் சுண்ட காய்ந்து அரை லிட்டர் ஆக மாறிய பின்னர் அடுப்பு தீயை ஆப் செய்து ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
பால் நன்கு ஆரிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த கலவையை ஐஸ் மோல்டில் நிரப்பி அதன் மீது பாயில் சீட் போட்டு மூடவும். பாயில் சீட்டின் நடுவில் சிறிது துளை இட்டு ஐஸ் குச்சிகளை நுழைக்கவும். ஐஸ் மோல்டு இல்லாவிடில் இதே போன்று டம்ளரிலும் செய்யலாம். வாயில் சீட் போட்டு மூடுவதால் ஐஸ் கிரிஸ்டல் ஆகாமல் கிரீமியாக இருக்கும். பின்னர் இதை எட்டு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
டபுள் பாய்லிங் மெத்தட்
சாக்லேட்டை உருக்குவதற்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அந்த பாத்திரத்தின் மீது வேறு பாத்திரம் வைத்து அதில் டார்க் சாக்லேட் மற்றும் மில்க் சாக்லேட் சேர்த்து மெல்ட் செய்ய வேண்டும். நீராவியால் சாக்லேட் உருகி வரும் இவ்வாறு செய்யும் முறையை டபுள் பாய்லிங் மெத்தட் என்று கூறுவர்.
உருகி வரும் சாக்லேட்டை கலந்து விட வேண்டும். பின்னர் இதை ஒரு டம்ளரில் மாற்றி ரூம் டெம்பரேச்சர் வந்த பின்னர் தயார் செய்து வைத்த ஐஸ்கிரீமை சாக்லேட்டில் டிப் செய்து எடுக்கவும். ஐஸ்கிரீம் கூலிங்காக இருப்பதால் சாக்லேட்டை டிப்ஸ் செய்து எடுத்தவுடன் கெட்டியாகிவிடும். இப்போது சுவையான குழந்தைகள் விரும்பும் சாக்கோபார் ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்.
இதையும் படிங்க : சுவை நாவிலேயே நிற்கும் ; எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ; இப்படி செஞ்சு அசத்துங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com