Karu Nagarajan: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கு அண்ணாமலையை பார்த்து திமுக பயப்படுகிறது என்கிறார் கரு. நாகராஜன்.
Karu Nagarajan: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கு அண்ணாமலையை பார்த்து திமுக பயப்படுகிறது என்கிறார் கரு. நாகராஜன்.
Published on: April 2, 2025 at 11:05 pm
சென்னை ஏப்.2 2025; தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கு. அண்ணாமலையின் பதவி நீட்டிப்பு என்பது இயற்கையாகவே இருக்கும் என அக்கட்சியின் துணைத் தலைவர் கரு. நாகராஜன் புதிய தலைமுறைக்கு இன்று (ஏப்ரல் 2.2025) அளித்த பேட்டியில் கூறினார்.
தொடர்ந்து பேசிய கரு நாகராஜன், ” கச்சத்தீவு குறித்து பேச திமுக மற்றும் காங்கிரசுக்கு என்ன தகுதி உள்ளது; இந்த தீர்மானம் போடுவதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? என்றார்.
தொடர்ந்து தீர்மானங்கள் சம்பிரதாயம் போல் போடப்படுகின்றன எனவும் கரு நாகராஜன் விமர்சித்தார். இதற்கிடையில், ” திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 1 லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்” என்றார்.
இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைதுக்கு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தான் காரணம் எனக் கூறிய கரு நாகராஜன், ‘ கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால் சர்வதேச கடல் எல்லை நமக்கு குறைந்தது; இதுதான் மீனவர்களின் கைதுக்கும் பிரச்சனைக்கும் காரணம்.
இதற்கு யார் காரணம்? காங்கிரஸ் கட்சியும் இன்று ஆட்சியில் இருக்கும் திமுகவும் தான் காரணம்” என்றார். இதை எடுத்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் அர்ப்பணிப்பான பணி அனைவருக்கும் தெரியும் என கூறிய கரு நாகராஜன் முக்கிய நேரங்களில் மாநில தலைவரின் பதவி நீட்டிப்பு என்பது இயற்கையாகவே இருக்கும்” என்றார்.
மேலும், அண்ணாமலையைப் பார்த்து திமுக பயப்படுகிறது என்பது உலகத்திற்கே தெரியும் எனவும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாட்டில் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. எம்புரான் படத்தை புகழ்ந்த அமைச்சர்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com