Minister Saji Cherian: மோகன்லால் நடிப்பில் பிரித்திவிராஜ் டைரக்ஷனில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டரில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள படம் எம்புரான்.
Minister Saji Cherian: மோகன்லால் நடிப்பில் பிரித்திவிராஜ் டைரக்ஷனில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டரில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள படம் எம்புரான்.
Published on: April 1, 2025 at 9:44 am
Updated on: April 1, 2025 at 9:48 pm
திருவனந்தபுரம் ஏப்ரல் 1 2025: கேரள மாநில கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியன் திங்கள்கிழமை (மார்ச் 31 2025) தியேட்டரில் எம்புரான் திரைப்படத்தை கண்டு களித்தார். அதன் பின்னர், ” நாட்டிலுள்ள அனைவரும் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும்; இயக்குனர் பிரித்திவிராஜின் தைரியத்தை நான் மனதார பாராட்டுகிறேன்” என்றார்.
தொடர்ந்து இந்த படம் மிகச் சரியான சமூக பிரச்சனை குறித்து பேசுகிறது; இவ்வளவு நேர்த்தியாக படத்தை உருவாக்க மிகுந்த தைரியம் வேண்டும். பிரித்திவிராஜன் தைரியத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
இந்தப் படம் பேசும் சமூக பிரச்சனை மிக முக்கியமானது; கேரளத்தில் எத்தனையோ படங்கள் சமூக பிரச்சனை குறித்து பேசி உள்ளன. அந்த வகையில் இதுவும் ஒரு முக்கியமான படமாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இந்த படத்தை பார்க்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் படம் குறித்து கவலை ஒன்றையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.
அதாவது படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதாகவும்; இது சிலருக்கு நெருடலை அளிக்கலாம் என்றார். அமைச்சரின் இந்த பேச்சுக்கள் மாநிலத்தில் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
முன்னதாக படத்தில் சில காட்சிகள் குறிப்பிட்ட சில பிரிவினரை தாக்கும் வகையில் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை கதையின் ஆசிரியர் திட்டவட்டமாக நிராகரித்தார்.
இந்த நிலையில் படத்தில் முக்கிய சமூகப் பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மாநிலத்தில் மீண்டும் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்புரான், படம் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுப்பு.. ஆனால்., பிரியங்கா காந்தி பரபரப்பு புகார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com