Chennai Meteorological Department: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chennai Meteorological Department: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: April 1, 2025 at 10:14 pm
சென்னை ஏப்ரல் 1 2025: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்து குறிப்பில், ” 2025 ஏப்ரல் நாலு மற்றும் ஐந்தாம் தேதிகளில் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது தவிர மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு உள்ள 15 மாவட்டங்கள் எவை?
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அந்தப் 15 மாவட்டங்கள், ” கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகியவை ஆகும்.
இந்த மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
குறிப்பாக கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெயில் சதத்தை கடந்து பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் அடுத்த இரு தினங்கள் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்களிடையே நிம்மதி பெருமூச்சு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சென்னை மெரினா கடலில் குதித்த இரு இளம் பெண்கள்.. போலீஸ் விசாரணையில் ஷாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com