மம்தா கட்சி மாயம்.. 1 லட்சம் வாக்குகளில் பா.ஜ.க வெற்றி.. மறுதேர்தல் முடிவு!

BJP Sweeps Falta Repoll : மேற்கு வங்கத்தில் நடந்த ஓர் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

Published on: May 24, 2026 at 9:07 pm

கொல்கத்தா, மே 24, 2026: மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதி மறுவாக்கெடுப்பில், பாஜக வேட்பாளர் தேவாங்க்ஷு பாண்டா, சிபிஐ(எம்) வேட்பாளர் சம்பு நாத் குர்மியை 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் மூன்றாவது இடத்தில் இருந்தது; திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்தத் தேர்தலில் பாஜக – 1,49,666 வாக்குகளும், சிபிஐ(எம்) – 40,645 வாக்குகளும், காங்கிரஸ் – 10,084 வாக்குகளும் பெற்றன. இந்நிலையில் பா.ஜ.க. வென்ற வாக்கு வித்தியாசம் 1,09,021 வாக்குகளாக உள்ளது. இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜஹாங்கீர் கான் போட்டியிலிருந்து விலகியிருந்தாலும், அவரது பெயர் வாக்குச்சீட்டில் இருந்ததால் 5,914 வாக்குகள் பெற்றார்.

மறுவாக்கெடுப்பு சூழல்

மேற்கு வங்கத்தில் மறுவாக்கெடுப்பு 285 வாக்குச்சாவடிகளில் மே 21 அன்று நடைபெற்றது. முறைகேடுகள், வன்முறை குற்றச்சாட்டுகள் காரணமாக தேர்தல் ஆணையம் மறுவாக்கெடுப்பு உத்தரவிட்டது.
இந்தத் தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கிடையில், “பால்டா மக்களின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது” என தேவாங்க்ஷு பாண்டா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், “வாக்கு எண்ணிக்கையில் பெரிய முரண்பாடுகள் உள்ளன” என திரிணாமுல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க : இஸ்லாமிய தலைவர்கள் தங்களின் பிரச்னையை பேச வேண்டும்.. ராகுல் காந்தி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com