Mohanlal’s Drishyam 3 Smashes Records : நடிகர் மோகன் லாலின் திரிஷ்யம்-3 திரைப்படம் பாக்ஸ்ஆபிஸில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது; இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Mohanlal’s Drishyam 3 Smashes Records : நடிகர் மோகன் லாலின் திரிஷ்யம்-3 திரைப்படம் பாக்ஸ்ஆபிஸில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது; இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Published on: May 24, 2026 at 6:54 pm
திருவனந்தபுரம், மே 24, 2026: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள திரிஷ்யம் 3 படம் வெளியான 58 மணி நேரத்திலேயே உலகளவில் ₹100 கோடி வசூலை கடந்துள்ளது. மே 21ஆம் தேதி மோகன் லால் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான இப்படம் பேட்ரியாட் படத்தின் ஆயுள் வசூலை முந்தி, மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஹிட் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இந்தப் படம் முதல் நாளில் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் ₹47.17 கோடி (ஒட்டுமொத்த), வெளிநாடுகளில் ₹70 கோடி வசூலித்துள்ளது. அந்த வகையில் படத்தின் உலகளாவிய வசூல் ₹117.17 கோடியாக காணப்படுகின்றது. ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், சித்திக், முரளி கோபி, பிஜு மேனன், கலாபவன் ஷாஜோன், ஆஷா சரத் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
திரிஷ்யம் 3 படத்தின் கதை, ஜார்ஜ்குட்டி (மோகன்லால்) தனது குடும்பத்தை மீண்டும் காப்பாற்ற முயற்சிக்கும் கதையின் நீட்சியாக உள்ளது. மேலும், இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜூன் 19 வெளியாகிறதா ஜனநாயகன்? பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com