IPL 2025 KKR vs MI: சொந்த மண்ணில் உறுமிய மும்பை.. அடங்கிப்போன கொல்கத்தா!ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
IPL 2025 KKR vs MI: சொந்த மண்ணில் உறுமிய மும்பை.. அடங்கிப்போன கொல்கத்தா!ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Published on: March 31, 2025 at 10:51 pm
மும்பை மார்ச் 31 2025; ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ( மார்ச் 31 2025) ஆட்டத்தில் பலம் வாய்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன் அணியும் மோதியது. இந்தப் போட்டியானது மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கை தொடர்ந்தது.
அந்த அணியால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியவில்லை.16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 116 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிகபட்சமாக ரகுவன்சி, 26 ரன்கள் எடுத்து இருந்தார். மற்ற வீரர்கள் ரிங் சிங் மற்றும் ராமன் தீப் சிங் ஆகியோர் முறையே 17, 22 ரன்கள் எடுத்திருந்தார்கள்.
பாண்டே தன் பங்குக்கு 19 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஓய்வு அறைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் 20 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தொடர்ந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்
மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தொடர்ந்த நிலையில் ரோகித் சர்மா, ரிக்கிஎல்டன் ஆகியோர் ஓப்பனர்களாக இறங்கினார்கள். இந்த ஜோடி முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டது.
இந்த நிலையில் ரோகித் சர்மா 13 ரன்னில் அவுட் ஆனார். இதில் அவர் ஒரு சிக்சர் அடித்து இருந்தார்.
அடுத்து வந்த ஜாக்ஸ் 16 ரன்னும், யாதவ் 27 ரன்னும் குவித்தனர். மறுபுறம் நங்கூரம் பாய்ந்தது போல் நின்று ஆடிய விக்கெட் கீப்பர் ரிக்கிஎல்டன் 41 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இதில் ஐந்து சிக்ஸர் 4 பவுண்டரிகள் அடங்கும். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவரில் 121 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது.
இதையும் படிங்க: IPL 2025: விராத் கோலி சம்பளம் தெரியுமா? வரி மட்டுமே இத்தனை கோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com