Wimbledon Junior : விம்பிள்டன் ஜூனியர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில், காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் அர்னவ் பாபர்கர்.
Wimbledon Junior : விம்பிள்டன் ஜூனியர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில், காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் அர்னவ் பாபர்கர்.

Published on: July 9, 2026 at 2:16 pm
லண்டன், ஜூலை 9, 2026: விம்பிள்டன் ஜூனியர்ஸ் 2026 டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் அர்னவ் பாபர்கர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கடந்த 36 ஆண்டுகளில் சிறுவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 18 வயதான பாபர்கர், ஜப்பானின் ரியோ தபதாவை வெறும் 52 நிமிடங்களில் 6-2, 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
முதல் சுற்றில் கிரேட் பிரிட்டனின் ஜோசுவா கிரேஸை 6-2, 6-2 என்ற கணக்கில் வென்ற பாபர்கர், அடுத்த சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் கீட்டன் ஹான்ஸை 6-2, 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இதுவரை அவர் ஒரு செட்டைக்கூட இழக்காமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
காலிறுதியில் பாபர்கர் இன்று மாலை 5 மணிக்கு அமெரிக்காவின் ஜோர்டான் லீயை எதிர்கொள்ளவுள்ளார். இந்த ஆட்டம், இந்திய டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபர்கரின் தொடர்ச்சியான வெற்றிகள், அவரை விம்பிள்டன் ஜூனியர்ஸ் பட்டத்திற்கான வலுவான போட்டியாளராக மாற்றியுள்ளன.
விம்பிள்டன் ஜூனியர்ஸ் சிறுவர் ஒற்றையர் பட்டத்தை இதுவரை மூன்று இந்தியர்கள் மட்டுமே வென்றுள்ளனர்: 1954-ல் ராமநாதன் கிருஷ்ணன், 1979-ல் ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் 1990-ல் லியாண்டர் பயஸ். இப்போது அந்தச் சிறப்பான பட்டியலில் இணைய பாபர்கர் முனைப்பு காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விம்பிள்டன் தொடர்: அரையிறுதிக்குள் நுழைந்த கோஸ்ட்யுக், நோஸ்கோவா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com