CM Vijay: சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
CM Vijay: சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Published on: October 7, 2026 at 3:48 pm
சென்னை, அக்.7, 2026: மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், கடைகளில் பால் உடனடியாக விற்றுத் தீர்வதால் பொதுமக்கள் தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், முதலமைச்சரின் இந்த ஆய்வு நடைபெற்றது. பால் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பாக அதிகாரிகளிடம் அவர் விரிவாக கேட்டறிந்தார்.
மாதவரம் ஆவின் பால் பண்ணையில் தினமும் 4 லட்சம் முதல் 4.5 லட்சம் லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து 45-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் லாரிகள் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. விற்பனைக்காக தினமும் சுமார் 3 லட்சம் முதல் 3.60 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரூ.2.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மைய ஆய்வகத்தின் துணைக் கட்டிடத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். தொடர்ந்து மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். பால் பண்ணையில் 3.75 லட்சம் லிட்டர் பாலை குளிர்விக்கும் அறைகளும், 80 மெட்ரிக் டன் பால் பவுடரை சேமிக்கும் வசதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரூ.31 கோடி செலவு செய்ததாக பரவும் காணொலி.. ஏ.ஐ மீது குற்றம் சுமத்தும் சத்யபாமா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com