போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.. போலீசாரல் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி!

Rahul Gandhi Vows : இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என போலீஸாரால் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Published on: October 8, 2026 at 10:23 am

புதுடெல்லி, அக்.8, 2026: டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) தொடர்பான நடவடிக்கைகளில் முறைகேடுகள் இருப்பதாகக் கூறியும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் புதன்கிழமை (அக்.7, 2026) மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஜன்பத்தில் உள்ள சாகர் ரத்னா உணவகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் இடதுசாரி கட்சிகள் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் பிரதிநிதிகளும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். மதிய உணவுக்குப் பின்னர் சுமார் 300 எம்.பி.க்கள் ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாகச் செல்லத் திட்டமிட்டனர். தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடிவு செய்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஜந்தர் மந்தரிலிருந்து சுமார் 900 மீட்டர் தொலைவில் உள்ள வின்ட்சர் பிளேஸ் பகுதியில் டெல்லி போலீஸார் பேருந்துகளைத் தடுத்து நிறுத்தினர். அங்கு கட்சித் தொண்டர்கள் திரண்டதால் மத்திய டெல்லியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

போலீஸ் தடுப்பையும் மீறி போராட்டம் தொடர்ந்த நிலையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் காவலில் எடுக்கப்பட்டனர். ராகுல் காந்தியை போலீஸார் பேருந்தில் ஏற்றிச் சென்ற நிலையில், பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்த பின்னர் அவரும் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே, போராட்டத்தைத் தடுக்க டெல்லி போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். முந்தைய நாளும் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் எடுக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்பட்ட இந்த மோதல் அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என போலீஸாரால் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்.. விநாயகர் ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com