தமிழ்நாட்டில் வாக்காளர் நீக்கம் குறித்து மௌனம்.. ராகுல் காந்திக்கு தி.மு.க கண்டனம்

DMK Questions Rahul Gandhi: தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தமான எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்திக்கு தி.மு.க. கேள்வியெழுப்பியுள்ளது.

Published on: October 7, 2026 at 11:57 am

சென்னை, அக்.7, 2026: தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தமான எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மவுனம் காப்பதாக திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் மூலம் நீக்கப்பட்ட வாக்குகள் தொடர்பாக ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், எஸ்.ஐ.ஆர்-க்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநில அரசுகளும் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்தை ராகுல் காந்தி ஏன் ஆதரிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதேநேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்ற நிலையில், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான வாக்காளர் நீக்கங்கள் குறித்து அவர் வெளிப்படையாக பேசாதது ஏன் என்றும் திமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசையும், காங்கிரஸ்–தமிழக வெற்றிக் கழக கூட்டணியையும் குறிப்பிட்டு, “விஜய்க்கு பயந்து தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் குறித்து பேசாமல் இருக்கிறாரா?” என சரவணன் அண்ணாதுரை விமர்சித்தார்.

இதனுடன் ராகுல் காந்தியை “முரண்பாடானவர்” என கடுமையான சொற்களால் அவர் சாடினார். இந்த விவகாரம் திமுக–காங்கிரஸ் இடையிலான அரசியல் கருத்து வேறுபாடு மேலும் வெளிப்படுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க :தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் 3 குழு அமைப்பு.. மல்லிகார்ஜூன் கார்கே ஒப்புதல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: விறுவிறுப்பாகும் வாக்குப்பதிவு… காலை 11 மணி நிலவரம் என்ன?
BYPOLL VOTING

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: விறுவிறுப்பாகும் வாக்குப்பதிவு… காலை 11 மணி நிலவரம் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com