போர்ச்சுக்கல் அணியில் இருந்து வெளியேற்றம்.. ரொனால்டோ

Cristiano Ronaldo: கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் அணியில் இருந்து திடீரென வெளியேறினார்.

Published on: October 7, 2026 at 12:51 pm

புதுடெல்லி, அக்.7, 2026: கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் அணியில் இருந்து திடீரென வெளியேறிய விவகாரத்துக்குப் பிறகும், உடல் தகுதியுடன் இருந்து கிளப் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தால், தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். போர்ச்சுகல் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டதே தான் முகாமில் இருந்து வெளியேறியதற்குக் காரணம் என 41 வயதான ரொனால்டோ விளக்கம் அளித்துள்ளார்.

நார்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதாக முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தாம் களமிறக்கப்படவில்லை என்றும், பின்னர் டென்மார்க் அணிக்கு எதிரான போட்டியிலும் தொடக்க வீரராக களமிறங்கப் போவதில்லை என ஜார்ஜ் ஜீசஸ் தெரிவித்ததால் முகாமில் இருந்து வெளியேறியதாகவும் ரொனால்டோ கூறியுள்ளார். இதுகுறித்து பயிற்சியாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே பிரச்சினைக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அணியை விட்டு வெளியேறியதற்காக தனது அணித்தோழர்கள் மற்றும் போர்ச்சுகல் ரசிகர்களிடம் ரொனால்டோ மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், தனது செயலுக்காக போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு வழங்கக்கூடிய தண்டனையை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், தாம் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றும், எதிர்காலத்தில் போர்ச்சுகல் அணிக்காக மீண்டும் களமிறங்கத் தயாராக இருப்பதாகவும் ரொனால்டோ தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : ‘நாங்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள்’.. ஹாக்கி கேப்டன் சலிமா டெடே!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com