Virat Kohlis salary: இந்த வருடம் விராட் கோலி தனது ரூ.21 கோடி ஐபிஎல் சம்பளத்திற்கு எவ்வளவு வருமான வரி செலுத்துவார் என்பது தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்.
Virat Kohlis salary: இந்த வருடம் விராட் கோலி தனது ரூ.21 கோடி ஐபிஎல் சம்பளத்திற்கு எவ்வளவு வருமான வரி செலுத்துவார் என்பது தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்.
Published on: March 27, 2025 at 11:37 am
இந்தியன் பிரீமியர் லீக் 2025 இல் சனிக்கிழமை (மார்ச் 22 2025) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராத் கோலி அரை சதம் அடித்தார். ஈடன் கார்டன்ஸில் நடந்த இந்தப் போட்டியில் சிறந்த ஆட்டக்காரராக இருந்தார். மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கிய வீரர் கோலி ஐபிஎல்லில் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராகத் தொடர்கிறார்.
இந்த நிலையில், அவரது விளையாட்டு மற்றும் பிரபலத்தைக் கருத்தில் கொண்டு, ஐ.பி.எல்.லில் அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? என்பது தெரியுமா? இது தொடர்பான அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு ஐபிஎல் 18வது ஐ.பி.எல் பதிப்பில் விராத் கோலி ரூ.21 கோடி சம்பளம் வாங்குகிறார். இது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆன்லைன் வரி மற்றும் வணிக ஆலோசனை நிறுவனமான டாக்ஸாலஜி இது தொடர்பாக சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2008 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் ஐபிஎல்லில் விராட் கோலியின் சம்பளம் வெறும் ரூ.12 லட்சமாக இருந்தது.
இது அவரது அற்புதமான விளையாட்டு மற்றும் அதிக புகழுக்கு மத்தியில் 2025 ஆம் ஆண்டில் ரூ.21 கோடியாக உயர்ந்தது. முனனதாக, 2010 க்குப் பிறகு, 2011-13 காலகட்டத்தில் அவரது சம்பளம் ரூ.8.28 கோடியாக கடுமையாக உயர்ந்தது.
வரி எவ்வளவு?
விராத் கோலி ரூ.21 கோடி வரை ஐ.பி.எல்.லில் சம்பாதிக்கிறார். பொதுவாக வருமான வரியை பொறுத்தமட்டில் ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான வருவாய்க்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.
அந்த வகையில் ரூ21 கோடிக்கு 30 சதவீத வரி ரூ.6.3 கோடி ஆகும். இதில் ரூ.5 கோடியை வருவாய் தாண்டினால் கூடுதல் வரி 25 சதவீதம் விதிக்கப்படும்.
ஆக, ரூ.6.3 கோடிக்கு கூடுதல் வரி ரூ.1.57 கோடி ஆகும். இதில் செஸ் வரி 4 சதவீதம் 0.315 கோடி விதிக்கப்படும். இதனால், விராத் கோலி வரியாக மட்டும் ரூ.8.19 கோடி செலுத்துவார்.
இந்த நிலையில், ரூ.21 கோடி சம்பளத்தில் வரி பிடித்தம் போக விராத் கோலிக்கு ரூ.12.81 கோடி கிடைக்கும்.
அவருக்கு வணிகச் செலவுகள் இருந்தால் (உதாரணமாக முகவர் கட்டணம், உடற்பயிற்சி செலவுகள், பிராண்ட் மேலாண்மை), வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் கணக்கிடுவதற்கு முன்பு பிரிவு 37(1) இன் கீழ் பல்வேறு வரி விலக்குகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளர் இவர்தான்: கை காட்டிய யஷ்வேந்திர சாஹல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com