first day collection of Salman Khan’s Sikander: நடிகர் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தின் முதல் நாள் வசூல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படம் இந்திய அளவில் ரூபாய் 26 கோடிகள் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
first day collection of Salman Khan’s Sikander: நடிகர் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தின் முதல் நாள் வசூல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படம் இந்திய அளவில் ரூபாய் 26 கோடிகள் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on: March 31, 2025 at 10:34 pm
மும்பை மார்ச் 31 2025: சல்மான் கானின் சிக்கந்தர் படத்திற்கு எதிர்பார்த்த அளவு முதல் நாள் வசூல் அமையவில்லை என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் நடித்திருந்த படம் சிக்கந்தர். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் புனித ரமலானை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. 2025-ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படமாக சிக்கந்தர் இருந்தது. எனினும் இந்த படத்திற்கு முதல் நாள் வசூல் மிகப்பெரிய அளவில் அமையவில்லை என கூறப்படுகிறது. அதாவது இந்திய அளவில் சிக்கந்தர் முதல் நாளில் ரூபாய் 26 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.
அதேநேரம் சாவா திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூபாய் 31 கோடிகள் வரை வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. சல்மான் கான் பொறுத்தவரை இந்திய அளவில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
அவரின் கடந்த கால படங்களும் மிகப்பெரிய அளவில் ஓபனிங் பெற்றுள்ளன. முதல் படத்தை அடுத்த படம் முந்தும் அளவிலேயே ஓபனிங் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஓப்பனிங்கில் சரிவு ஏற்பட்டுள்ளது.
#Xclusiv… SALMAN KHAN & EID: *DAY 1* BIZ – FROM 2010 TO 2025… Let's have a look at the *Day 1* biz of #SalmanKhan movies from 2010 to 2025.
— taran adarsh (@taran_adarsh) March 31, 2025
NOTE: OPENING DAY BIZ…
⭐ 2010: #Dabangg ₹ 14.50 cr
⭐ 2011: #Bodyguard ₹ 21.60 cr
⭐ 2012: #EkThaTiger ₹ 32.93 cr
⭐ 2014: #Kick… pic.twitter.com/YDCV3KUgLv
சல்மான் கான் படத்தின் மிகப்பெரிய ஓபனிங்
சல்மான் கான் படத்தின் மிகப்பெரிய ஓபனிங் ஆக பாரத் அமைந்தது. இந்த படம் ரூ.42.30 கோடி வசூலித்து இருந்தது. இந்த நிலையில் சிக்கந்தர் திரைப்படம் ₹30.06 கோடி வசூலித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2010 ஆம் ஆண்டு வெளியான சல்மான் கானின் தபாங் திரைப்படம் முதல் நாளில் ₹14.50 கோடி வசூலித்திருந்தது. பாடிகாட் திரைப்படத்தைப் பொறுத்தவரை முதல் நாளில் ₹21.60 கோடி வசூலித்திருந்தது.
மற்ற படங்களான ஏக் தா டைகர் முதல் நாளில் ₹32.93 கோடியும்; கிக் திரைப்படம் ₹26.40 கோடியும்; சுல்தான் ₹36.54 கோடியும் முதல் நாளில் வசூல் வேட்டை நடத்தி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யார் இந்த சுருதி நாராயணன்?வீடியோ சர்ச்சையில் சிக்கிய தமிழ் நடிகை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com