Fixed Deposit: ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 8.60 சதவீதம் வரை வங்கிகள் வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. இந்த வட்டி விகிதங்கள் ஐந்து ஆண்டு கால முதலீட்டுக்கு பொருந்துகின்றன.
Fixed Deposit: ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 8.60 சதவீதம் வரை வங்கிகள் வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. இந்த வட்டி விகிதங்கள் ஐந்து ஆண்டு கால முதலீட்டுக்கு பொருந்துகின்றன.
Published on: March 31, 2025 at 10:21 pm
இந்திய மக்களிடையே பிக்சட் டெபாசிட் முதலீட்டுக்கு அமோக வரவேற்பு உள்ளது. பங்கு தொடர்பான திட்டங்கள் போல் அல்லாமல் இந்த திட்டங்கள் சான்றளிக்கப்பட்ட வருமானத்தை வழங்குகின்றன. முதலீட்டாளர்கள் பெருமளவு இதில் முதலீடு செய்ய இதுவும் ஓர் முக்கிய காரணம்.
இந்த நிலையில் நாட்டின் முன்னணி வங்கிகளின் ஐந்து ஆண்டு கால பிக்சட் டெபாசிட் திட்டங்கள், மற்றும் அதன் வட்டி விகிதங்கள் குறித்து நாம் இங்கு பார்க்கலாம்.
ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க்
ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஐந்து ஆண்டுகால பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 8.20% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சூர்யா டே ஸ்மால் பைனான்ஸ் வங்கி
சூர்யா டே ஸ்மால் பைனான்ஸ் வங்கி, ஐந்து ஆண்டு கால முதலீட்டுக்கு எட்டு புள்ளி 60 சதவீத வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது.
யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் பேங்க்
யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கியை பொருத்தமட்டில் 5 ஆண்டு கால பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 8.15 சதவீதம் வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது.
நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்
நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் வங்கியை பொருத்தமட்டில் 5 ஆண்டுகால பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 8 சதவீத வட்டியை வழங்குகிறது.
ஏ யு ஸ்மால் பைனான்ஸ் பேங்க்
ஜே யு ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஐந்து ஆண்டுகால பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்
ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், ஐந்து ஆண்டு கால பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பொதுக் குடிமக்களுக்கு 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
உட்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்
உட்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், ஐந்து ஆண்டுகால பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியை பொருத்தமட்டில் 5 ஆண்டுகால பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
பொறுப்பு துறப்பு: ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் ரூபாய் 5 லட்சம் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு மட்டுமே இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு வழங்கப்படும். இது தொடர்பாக முதலீட்டாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் கேட்டு விவரங்களை தெரிந்து கொள்வது உத்தமம். முதலீட்டாளர்களின் எந்த ஒரு லாப நஷ்டங்களுக்கும் திராவிடன் டைம்ஸ் எவ்விதத்திலும் பொறுப்பாகாது.
இதையும் படிங்க பி.பி.எஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா ஸ்கீம் வட்டி விகிதம் மாற்றம்? முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com