Post Office Small Savings Scheme: ஏப்ரல் முதல் பி.பி.எஃப், மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மறறும் தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாறும்.
Post Office Small Savings Scheme: ஏப்ரல் முதல் பி.பி.எஃப், மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மறறும் தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாறும்.
Published on: March 25, 2025 at 4:43 pm
இந்திய அஞ்சலகத்தில் பெண்கள், குழந்தைகள், சாதாரண மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் உள்ளன. இவற்றில் கால வைப்புத்தொகை, மூத்த குடிமக்கள் சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரிதி கணக்கு போன்ற திட்டங்களும் வருகின்றன.
இந்தத் திட்டங்களில், முதலீட்டாளர்கள் உத்தரவாதமான வட்டி வருவாய் பெறுகின்றனர். இதனால், பாதுகாப்பான மற்றும் நம்பகமான பட்டியலில் இந்தத் திட்டங்கள் வருகின்றன.
அஞ்சலக திட்டங்களை பொறுத்தவரை ஒவ்வொரு 3 மாத காலாண்டு முடிவின் போது வட்டி விகிதங்கள் இந்திய நிதியமைச்சகத்தால் திருத்தி அமைக்கப்படும். அந்த வகையில், தற்போதைய வட்டி கணக்கீடு 2025 மார்ச் 31ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. தொடர்ந்து, 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வட்டி விகிதங்கள் திருத்தியமைக்கப்படும்.
அஞ்சலக திட்டங்கள் | வட்டி விகிதம் (%) |
---|---|
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் | 8.2 |
1 ஆண்டு டைம் டெபாசிட் | 6.90 |
2 ஆண்டு டைம் டெபாசிட் | 7.00 |
3 ஆண்டு டைம் டெபாசிட் | 7.10 |
5 ஆண்டு டைம் டெபாசிட் | 7.50 |
5 ஆண்டு ஆர்.டி ஸ்கீம் | 6.70 |
மாதாந்திர வருவாய் திட்டம் | 7.40 |
தேசிய சேமிப்பு சான்றிதழ் | 7.70 |
பி.பி.எஃப் | 7.10 |
கிசான் விகாஸ் பத்ரா | 7.50 |
சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) | 8.20 |
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் | 7.5 |
இந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் 2025 மார்ச் 31க்கு முன்னர் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சீனியர் சிட்டிசன்கள் ஃபிக்ஸட் டெபாசிட்: 2025 மார்ச்சில் எந்த ஸ்மால் வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com