Actor Mohan Lal: நடிகர் மம்முட்டிக்காக, நடிகர் மோகன்லால் சபரிமலையில் தரிசனம் செய்தார். அங்கு நடிகர் மம்முட்டிக்காக அவர் சிறப்பு அபிஷேகம் செய்ததாக கூறப்பட்டது.
Actor Mohan Lal: நடிகர் மம்முட்டிக்காக, நடிகர் மோகன்லால் சபரிமலையில் தரிசனம் செய்தார். அங்கு நடிகர் மம்முட்டிக்காக அவர் சிறப்பு அபிஷேகம் செய்ததாக கூறப்பட்டது.
Published on: March 25, 2025 at 4:27 pm
Updated on: March 25, 2025 at 4:29 pm
சென்னை மார்ச் 25 2025: மம்முட்டி உடல்நலம் குறைவுற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், மோகன்லால் அவருக்காக சபரிமலையில் சிறப்பு தரிசனம் செய்தார். இது, தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகள் வெளியாகி இருந்தன. இதனால் நடிகர் மம்முட்டி உடல்நலம் குறைவற்று இருப்பது உண்மைதானா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளும் எழுந்தன.
இந்த நிலையில் லூசிபர் 2 பாகமான எம்புரான் திரைப்படத்தின் முன்னோட்ட செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் நடிகர் மோகன்லால் மற்றும் இயக்குனரும் நடிகருமான பிரித்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர் ஒருவர் நடிகர் மம்முட்டிக்காக நீங்கள் சபரிமலை சென்றீர்கள்; அங்கு அவருக்காக என்ன வேண்டினீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நடிகர் மோகன்லால், ” இதற்கு எதற்கு சொல்ல வேண்டும்? அது ரொம்ப பர்சனல் அல்லவா.. உங்களுக்காக பிரார்த்தனை செய்ததை எதற்கு வெளியில் சொல்ல வேண்டும். அவர் என் நண்பர் என் சகோதரர், இதில் எந்த தவறும் இல்லை. நான் உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யலாம்” என்றார்.
உங்களைப் பார்த்தாலும் சபரிமலை சுவாமி போல் தான் இருக்கிறது என்றார். தொடர்ந்து மற்றொரு நிருபர், ” மம்முட்டியின் உடல்நிலை குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறதே.. ! அவர் எப்படி இருக்கிறார்? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நடிகர் மோகன்லால், ” அவருக்கு என்னமோ ஒரு சின்ன பிரச்சனை இருந்தது; அது எல்லோருக்கும் இருக்கும். அது மாதிரி தான்; கவலைப்படத் தேவையில்லை. மம்முட்டி நலமுடன் இருக்கிறார்” என்றார்.
இதையும் படிங்க: சல்மான் கான் உடன் ஹிந்தி படத்தில் சத்யராஜ்.. ட்ரைலர் எப்படி இருக்கு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com