Actress Deepika Padukone: ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது தமக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது எனக் கூறிய நடிகை தீபிகா படுகோன் ஆஸ்கார் திரைப்பட விழாவில் இந்திய திரைப்படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன” என்றார்.
Actress Deepika Padukone: ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது தமக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது எனக் கூறிய நடிகை தீபிகா படுகோன் ஆஸ்கார் திரைப்பட விழாவில் இந்திய திரைப்படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன” என்றார்.
Published on: March 25, 2025 at 5:55 pm
பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் பேட்டி ஒன்றில், ” இந்திய திரைப்படங்கள் ஆஸ்கார் திரைப்பட விழாவில் புறக்கணிக்கப்படுகின்றன” என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். தொடர்ந்து பேசிய நடிகை தீபிகா படுகோன், ” இந்தியாவில் நல்ல கதை அம்சம் கொண்ட பல்வேறு திரைப்படங்கள் வெற்றியை பெற்றுள்ளன; இதில் சில திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பெயர் பெற்றவை.
ஆனால் இந்த திரைப்படங்கள் ஆஸ்கார் விழாவில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்திய நடிகர் மற்றும் நடிகைகளும் ஆஸ்கார் விருதில் புறக்கணிக்கப்படுகின்றனர்” என்றார். தொடர்ந்து ஆஸ்கார் வென்ற ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் குறித்து பேசிய நடிகை தீபிகா படுகோன், ” அந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை; இருந்தபோதிலும், ஒரு இந்தியனாக அந்த படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது என்னை பெருமை கொள்கிறேன்” என்றார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகை தீபிகா படுகோன் பாலிவுட் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். இவர் தமிழில் ரஜினிகாந்த் உடன் கோச்சடையான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அண்மையில் வெளியான கல்கி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் தோன்றியிருந்தார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க மம்முட்டிக்காக சபரிமலை சென்ற மோகன்லால்.. வேண்டுதல் என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com