புரொடெக்ஷன் கம்பெனி தொடங்கிய சிபிராஜ்.. பெயர் என்ன தெரியுமா?

Sibiraj Film Production: நடிகர் சிபிராஜ் தற்போது புதிய முயற்சியாக திரைப்பட தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளார்.

Published on: October 9, 2026 at 4:31 pm

சென்னை, அக்.9, 2026: நடிகர் சிபிராஜ் தற்போது புதிய முயற்சியாக திரைப்பட தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளார். இதற்காக அண்டர்டாக் ஃபிலிம்ஸ் (Underdog Films) என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். நடிகராக மட்டுமின்றி, தரமான மற்றும் வித்தியாசமான கதைகளை திரைப்படமாக உருவாக்கும் நோக்கத்துடன் இந்த தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டர்டாக் ஃபிலிம்ஸ் மூலம் புதுமையான கதைக்களம் கொண்ட திரைப்படங்களை தயாரிக்க சிபிராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வழக்கமான வர்த்தக அம்சங்களைத் தாண்டி புதிய முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், திறமையான இளம் படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் தயாரிப்பு நிறுவனம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ் திரையுலகில் புதிய கதைகள் மற்றும் புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் முயற்சியாக இது அமையும்.

நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றுள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும் தனது பயணத்தை தொடங்கியிருப்பது அவரது திரைப்பயணத்தில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. அண்டர்டாக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு குறித்த அறிவிப்புகள் மற்றும் அதில் இணையவுள்ள திரைப்படங்கள் தொடர்பான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : போர் சீற்றத்தில் இந்தியன் 3.. எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா சேனாதிபதி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com