Canada: கனடாவில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதனை கனடாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
Canada: கனடாவில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதனை கனடாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
Published on: April 5, 2025 at 11:30 am
ஒட்டாவா, ஏப்.5 2025: கனடாவின் தலைநகர் ஒட்டாவாவிற்கு அருகிலுள்ள ராக்லேண்ட் என்ற நகரத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த நிலையில், உள்ளூர் போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. எனினும், இந்தத் தாக்குதல் ஏன் நடந்தது? தாக்குதலுக்கான சூழ்நிலைகள் குறித்த கூடுதல் விவரங்கள் தெரியவில்லை.
இந்தத் தாக்குதல் குறித்து, கனடாவில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டர் எக்ஸ் சமூக வளைதளத்தில் நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுளளது. அத்துடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “ஒட்டாவாவிற்கு அருகிலுள்ள ராக்லேண்டில் கத்திக்குத்து காரணமாக இந்தியர் ஒருவர் உயிரிழந்தது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துயரமடைந்த உறவினர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க உள்ளூர் சமூக சங்கம் மூலம் நாங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில், இது குறித்து சிபிசி வெளியிட்டுள்ள செய்தியில், கிளாரன்ஸ்-ராக்லேண்டில் ஒருவர் இறந்து கிடந்தார் என்றும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், மரணத்திற்கான காரணத்தையோ அல்லது ஏதேனும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையோ அதிகாரிகள் வெளியிடவில்லை.
இதையும் படிங்க Badar Khan Suri: அமெரிக்காவில் இந்திய மாணவர் கைது.. விரைவில் நாடு கடத்தல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com