கொழும்பு, ஏப் 5 2025: பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில் இலங்கைக்கு தனது முதல் பயணத்தை இன்று (ஏப் 5 2025) தொடங்கினார். அவருக்கு, இலங்கையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பயணத்தின் போது, இரு நாடுகளும் பாதுகாப்பு, எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் வர்த்தகத் துறைகளில் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கை நாட்டின் அதிபராக அனுர குமார திசாநாயக்க கடந்த ஆண்டு (2024) பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
2024 இல் திசாநாயக்க தனது பதவிக் காலத்தைத் தொடங்கிய பிறகு முதன் முறையாக இலங்கை நாட்டுக்கு செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். டிசம்பரில் திசாநாயக்கவின் இந்திய வருகைக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அமெரிக்காவில் இந்தியருக்கு 35 ஆண்டுகள் சிறை: செய்த குற்றம் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்