US child pornography case: அமெரிக்காவில் சிறார்களை சுரண்டுதல், குழந்தைகள் ஆபாசப் படங்கள் எடுத்தல் ஆகிய குற்றங்களுக்காக இந்தியருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
US child pornography case: அமெரிக்காவில் சிறார்களை சுரண்டுதல், குழந்தைகள் ஆபாசப் படங்கள் எடுத்தல் ஆகிய குற்றங்களுக்காக இந்தியருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Published on: April 3, 2025 at 11:23 am
நியூயார்க் ஏப்.3 2025: சமூக ஊடக செயலி மூலம் பல குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக 31 வயது இந்தியர் குர்ரெமுலா அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த நபர் ஒரு டீனேஜராக நடித்து, சிறுமிகளிடம் பழகி அவர்களின் ஆபாச படங்களை பெற்று ஆன்லைனில் பகிர்ந்து விடுவேன் என காரியம் சாதித்து வந்துள்ளார்.
இவர் குடியேற்ற விசா மூலமாக அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். இது குறித்து வழக்கறிஞர் ராபர்ட் ட்ரோஸ்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கும், குழந்தை ஆபாசப் படங்களை கடத்துவதற்கும் அவருக்கு 420 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மாவட்ட நீதிபதி சார்லஸ் குட்வின், ”இந்தக் குற்றங்கள் சமூகத்தில் மிகவும் தீவிரமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட நீண்ட சிறைத்தண்டனை சரியான தீர்வாக கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இந்தியருக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகப்பட்ச சிறைத்தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : துபாய் இளவரசருக்கு மகள் பிறந்தாள்.. பெயர் என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com