Dubai Crown Prince: துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் தனது நான்காவது குழந்தையை வரவேற்றுள்ளார். இந்தக் குழந்தைக்கு ஹிந்த் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Dubai Crown Prince: துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் தனது நான்காவது குழந்தையை வரவேற்றுள்ளார். இந்தக் குழந்தைக்கு ஹிந்த் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Published on: March 27, 2025 at 11:15 am
துபாய், மார்ச் 27 2025: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது தனது நான்காவது குழந்தையான ஹிந்த் பின்த் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் என்ற மகளைப் பெற்றெடுத்ததாக அறிவித்தார்.
இது குறித்து, இன்ஸ்டாகிராமில் செய்தியைப் பகிர்ந்துகொண்டு, “ஓ அல்லாஹ், அவளுக்கு உனது அன்பினால் நிறைந்த இதயத்தையும், உன்னை நினைவுகூரும் நாவையும் கொடு எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, உனது ஒளியிலும் வழிகாட்டுதலிலும் அவளை அதிகப்படுத்தி அவளுக்கு ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு என்ற ஆடைகளை அணிவிப்பாயாக” எனத் தெரிவித்துள்ளார். ‘ஹிந்த்’ என்ற பெயர் ஷேக் ஹம்தானின் தாயார், துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மனைவி ஷேக் ஹிந்த் பின்த் மக்தூமைக் கௌரவிக்கிறது.
ஷேக் ஹம்தான் மே 2021 இல் ரஷீத் மற்றும் ஷேக்கா என்ற இரட்டையர்களையும், பிப்ரவரி 2023 இல் அவரது மகன் முகமதுவையும் பெற்றெடுத்தார். ஷேக் ஹம்தான் 2008 முதல் துபாயின் பட்டத்து இளவரசராக இருந்து வருகிறார். அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைப் பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தென் கொரியாவில் பயங்கர தீ: இதுவரை 24 பேர் உயிரிழப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com